கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறைக்கு சொந்தமான வால்பாறை படகு இல்ல பகுதியில், காட்டு யானை உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கீழுமாக தந்தம் கொண்டுள்ள UP AND DOWN எனப்படும் இந்த யானையால் நடைப்பயிற்சி செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.