கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாத நிலையில், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க 6வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.