தேசிய கல்வி கொள்கை திட்டங்களுக்கான விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளாமல் நிதி மட்டும் கேட்பது எந்த விதத்தில் நியாயம் என, தமிழக அரசுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மும்மொழிக்கொள்கை உள்ளதாக கூறினார்.