காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு அம்மன் புகைப்படம் வழங்கப்பட்டது.