கோவை அம்ரிதா விஸ்வ வித்யா பீடத்தில் சர்வதேச சட்ட பள்ளியை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கௌரி, மாதா அம்ருதானந்தமயி மடத்தின் பொருளாளர் மற்றும் அறங்காவலர் சுவாமி ராமகிருஷ்ணானந்த புரி, AISL-ன் டீன் டாக்டர் அனில் ஜி.வரியத், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.வெங்கட் ரங்கன், பதிவாளர் டாக்டர் பி.அஜித் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இதையும் படியுங்கள் : அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைவார்களா? நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும் - செங்கோட்டையன்