கோவையில் தொழில் அமைப்பினருடன் ஆலோசனை நடத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக குழும தலைவர் சீனிவாசன், குடும்பமாக வந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க என கோவைக்கே உரிய நகைச்சுவையுடன் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது. கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய பின் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும் கோவை அன்னபூர்ணா உணவக குழும தலைவருமான சீனிவாசன் இவ்வாறு பேச கூட்டத்தில் சிரிப்பொலி எழும்பியது.