கோவை மாவட்டம் சிறுமுகை அருகே, சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்வதாக குற்றம் சாட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், தண்ணீர் நிறம் மாறி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.