ஈரோடு மாநகராட்சியில் உள்ள வஉசி பூங்காவை சுத்தம் செய்து மக்கள் பயன்பெறும் வகையில் அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பூங்காவிற்கு வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்களும் விடுமுறை நாட்களில் வந்து பொழுதை கழிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது பராமரிப்பின்றி வேலையில்லாதவர்கள் தூங்குமிடமாகவும், குடிகாரர்களின் கூடாரமாகவும் மாறியுள்ளதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பூங்கா முழுவதும் முட்புதர்கள் மண்டியுள்ளதாலும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பொது மக்கள் பூங்காவிற்கு வருவதை நிறுவிட்டதாகவும் கூறப்படுகிறது.