சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் உடையாத சிவப்பு நிற மண்பானை கண்டறியப்பட்டதால் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வரும் நிலையில் கண்ணாடி பாசிகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, உடைந்த செம்பு பொருட்கள் கண்டறியப்பட்டன. தற்போது 2 அடி உயரம் , ஒன்றரை அடி அகலம் கொண்ட உடையாத சிவப்பு நிற பானை கண்டறியப்பட்டுள்ளது.