ராமேஸ்வரம் அடுத்த மெய்யம்புளி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் - லட்சுமி தம்பதியினருக்கு சுமன், சமந்தா ஸ்ரீ என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர் இந்த நிலையில் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மணிகண்டன் அவருடைய பிள்ளைகளுக்கு ஆதார் கார்டு எடுக்க ராமேஸ்வரம் தபால் நிலையம் சென்ற போது பெண் பிள்ளையின் போட்டோ வைத்து ஆண் பிள்ளையின் கைரேகை கருவிழி உள்ளிட்டவற்றை மாற்றி அமைத்து மணிகண்டனின் மகன் சுமனுக்கு ஆதார் கார்டு வந்துள்ளது. இந்த நிலையில் மணிகண்டனின் மகள் சமந்தா ஸ்ரீக்கு ஆதார் கார்டு அப்ளை செய்தும் வரவில்லை என புகார் தெரிவிக்கின்றனர் மேலும் இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ராமேஸ்வரம் தபால் நிலையத்தில் முறையிட்டும் அவர்கள் முறையான பதில் கூறாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லுங்கள், மதுரை தலைமை அலுவலகம் அல்லது பெங்களூரில் உள்ள ஆதார் கார்டு தலைமை அலுவலகத்திற்கு செல்லுங்கள் என்று அழைக்கலைப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் மணிகண்டனின் தாயார் ராஜேஸ்வரி அவரது மனைவி லட்சுமி ஆகியோர் இன்று ராமேஸ்வரம் தபால் நிலையத்தில் தங்களது பிள்ளைகளுக்கு ஆதார் கார்டு குளறுபடி வந்தது தங்கள் மூலம் தான் என்று கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தபால் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஆதார் கார்டு ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய முயற்சி செய்யாமல் நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள் ஒன்றும் செய்ய முடியாது என அலட்சியமாக பதில் கூறுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் அன்றாட கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வரும் நிலையில் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆதார் கார்டு ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதினால் மன உளைச்சல் அடைந்துள்ளதால் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link பழங்குடியினர் அல்லாதோரை வைத்து பழங்குடியினர் மாநாடா?