கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிரில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறையினர் பரிந்துரைத்த மருந்தை தெளித்தும் நோய் தாக்கம் குறையவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.