மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள உடும்பை மீட்ட வனத்துறையினர், அதனை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ரஜினியின் வீட்டிற்குள் புகுந்த உடும்பு வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் அங்கிருந்த பொருட்களை தள்ளி விட்டது.