துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் எழுத்துப்பிழையுடன் இருந்ததால் ஒட்டிய சில மணி நேரத்திலேயே கிழிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் மான்சூன் என்பதற்கு பதிலாக மூன்சூன் என அச்சிடப்பட்டிருந்தது. பிழைகள் இருந்ததால் போஸ்டரை பார்த்து பலரும் சிரித்த நிலையில் சில மணி நேரத்திலேயே போஸ்டர் கிழிக்கப்பட்டது.