திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். கொள்கை இல்லாத கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது என்றும், பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் என்றும் ஈடேறாது என கூறியிருப்பது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.