குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் அருகே திருட்டு போன இருசக்கர வாகனத்தை, போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பக்தர் ஒருவர் கோவில் வளாகத்தின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு, சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் சென்ற போது மர்மநபர் இருசக்கர வாகனத்தை, தனது வாகனம் போல், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் திருடிச் சென்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்த போலீசார், நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை மீட்டனர். வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.