சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சாலையை கடப்பதற்காக காத்திருந்த இருசக்கரவாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இளையான்குடி சாலையில் வந்த டிப்பர் லாரியை திருப்ப முயன்ற ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சாலையை கடப்பதற்காக இடதுபுறம் காத்திருந்த நிலையில், அதனை கவனிக்காத ஓட்டுநர் லாரியை திருப்பினார். அப்போது லாரியின் அடியில் சிக்கி இருசக்கரவாகனம் உருக்குலைந்த போதும், அதனை ஓட்டி வந்த இளைஞர் நூலிழையில் உயிர்தப்பினார்.