ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.3 பேர் காயமடைந்தனர்.இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்ற இளைஞர் நண்பருடன் ஆற்காடு பாலத்தில் பைக்கில் சென்ற போது ஆட்டோவில் மோதினார்.