சென்னை தேனாம்பேட்டையில் நடந்த விபத்தில் சிக்கி த.வெ.க மாநாட்டிற்கு பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஞாயிறுக்கிழமை நடைபெற்ற த.வெ.க மாநாட்டிற்கு அக்கட்சி தொண்டர்கள் வசந்தகுமார் மற்றும் ரியாஸ் ஆகியோர் பைக்கில் புறப்பட்டனர். தேனாம்பேட்டை மெட்ரோ அருகே பைக்கில் சிக்னலை கவனிக்காமல் வேகமாக சென்றபோது, லாரி குறுக்கே வருவதையறிந்து பிரேக் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலைதடுமாறி பைக்குடன் இருவரும் சாலையில் தேய்த்தபடியே உரசி சென்று சாலையில் திரும்ப முயன்று லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமான உயிரிழந்தனர்.