காஞ்சிபுரத்தில், 18 வயது இளம்பெண் உட்பட இரு பெண்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்த சிவகாமி மற்றும் அவரது மகள் தேவதர்ஷினியை வீடு புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் காயமடைந்த இருவரும் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.