சென்னை பெரம்பூரில் ரயிலில் கஞ்சா கடத்தியதாக 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து எர்ணாகுளம் நோக்கி செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்த முயன்றதாக 2 பெண்களை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பிடித்து, அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.