திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர். பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக பைக்கில் சென்ற பூபாலன் மற்றும் நாகராஜை பிடித்து விசாரித்தனர். அப்போது, நாராயணன் என்பவருடைய வாகனத்தை திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.