திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரிமுத்தூர் மேம்பாலத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். ஆந்திரா மாநிலம் மலானூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேஷன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூருக்கு சென்று பின் வீடு திருப்பினார். இவர் தாமலேரிமுத்தூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில், காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.