ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். வெங்காளூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மலையரசன், பூவேந்திரன் ஆகிய இருவரும் கரும்பு வெட்ட மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு பைக்கில் சென்றபோது கார் மோதியது. இதில் உயிரிழந்த இருவரின் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.