திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குடியிருப்பு பகுதியில் இரு வேறு இடங்களில் மக்களை அச்சுறுத்தி வந்த நல்லபாம்பு மற்றும் சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். சமத்துவபுரத்தில் உள்ள அம்சவல்லி என்பவரது வீட்டில் பதுங்கியிருந்த நல்ல பாம்பும், கொல்லப்பட்டியில் நாகராஜ் என்பவர் தோட்டத்தில் சுற்றி திரிந்த சாரை பாம்பும் பிடிபட்டது.