திருவண்ணாமலையில் பாஜகவின் புதிய மாவட்ட தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட கோவிந்தன், சாய்பாபா, சுமதி ஆகியோர் தகுதியற்றவர்கள் எனக் கூறி, புவனேஷ் குமார் தரப்பினர் பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.