கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே ஏரியில் குளித்த பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில், சிவக்குமார் மகள் 11 வயதான சிவசக்தியும், சேகர் மகள் 12 வயதான ஸ்வேதாவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.