நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 10 பவுன் தங்க தாலியை பறித்து தப்பிய 2 கொள்ளையர்களை ஊர் மக்கள் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அணைப்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்று கொண்டிருந்த ஜெயலலட்சுமி என்பவரின் தங்க தாலியை அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த தமிழ் மற்றும் தங்கராஜ் பறித்து சென்றதாக தெரிகிறது.இதையும் படியுங்கள் : கரும்பு லாரியை வழிமறித்து துரத்திய யானை காரையும் முட்டித்தள்ளியதால் மக்கள் கடும் அச்சம்