திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் லஞ்சம் வாங்கிய இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டனர். கார் விபத்து தொடர்பாக அதன் உரிமையாளர் அஜித்குமாரை அழைத்து விசாரித்த பெரியபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், 10 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக அஜித்குமர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகாரளித்த நிலையில், லஞ்ச ஒழிப்புதுறையினரின் அறிவுரையின் பேரில் வேறொருவர் மூலமாக SSI பாஸ்கரனிம் அஜித்குமார் பணம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், பாஸ்கரன் மற்றும் ஒரு காவலரை கையும் களவுமாக பிடித்தனர்.