முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பியதாக இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சிவா மற்றும் அவரது நண்பர் சந்திரசேகர் ஆகிய இருவரும் டாஸ்மாக் கடையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டு முதலமைச்சர் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.