திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். தஞ்சாவூரை சேர்ந்த ராஜா மற்றும் திருச்சி திருவரங்கத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற அவ்விருவரும் கர்நாடகாவில் இருந்து காரில் 22 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்ததை வாகன சோதனையின் போது போலீசார் கண்டுபிடித்தனர்.