திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் குரங்கை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மற்றும் ராஜாராம், தவசிமடை பகுதியில் உள்ள தோட்டத்தில் துப்பாக்கி வைத்து குரங்கை வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். வனத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் குரங்கு தோல் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.