திருவள்ளூரில் முதியவர்கள், பெண்களை குறிவைத்து நகை மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்க நகை வியாபாரத்தில் முதலீடு செய்தால், இரண்டு மாதத்தில் இரட்டிப்பு லாபம் பெற்று தருவதாக புவனேஷ்வரி என்ற பெண்ணிடம் 80 சவரன் நகை மற்றும் 41 லட்சம் ரூபாய் மோசடி செய்தததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நான்சி, ஷீபா என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த சரிதா மற்றும் நான்சியின் கணவர் பரிமள செல்வம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.