தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தேவாரம் பகுதியில், சார்பு ஆய்வாளர் என கூறி பெண்ணிடம் 3 லட்ச ரூபாய் கடனாக பெற்று ஏமாற்றிய போலி போலீஸ் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பணத்தை வாங்கிவிட்டு பெங்களூருவில் தலைமறைவானவர்களை பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.