சென்னை திருவான்மியூரில் மதுபோதையில் காவலரை தாக்கி கையை கடித்த இருவரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆர்டிஓ அலுவலகம் எதிரே உள்ள எலைட் டாஸ்மாக் அருகே நின்றிருந்த இருவரை காவலர் வேலாயுதம் விசாரித்துள்ளார். மதுபோதையில் இருந்த இருவரும் காவலரை தாக்கி வலது கையை கடித்ததோடு, பைக் சாவியால் இடது கையில் கிழித்துள்ளனர்.