மதுரையில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக டவுசர் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஆளில்லாத வீடுகளில் டவுசர், குரங்கு குல்லா அணிந்த இரண்டு பேர் ஆளில்லாத வீடுகளில் நோட்டமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் புகார் தெரிவித்திருந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஈரோட்டைச் சேர்ந்த சிவா, சிவகங்கையைச் சேர்ந்த மருதுபாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.