கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையில் இருந்து பழனிக்கு சென்று கொண்டிருந்த கார் சேப்பாக்கம் பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சபரி, பிரபாகரன் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஓட்டுநர் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.