குமரி மாவட்டம் கருங்கல் அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வினு ஆகிய இருவரும் பைக்கில் கருங்கல்லில் இருந்து பாலூர் தேங்காபட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அதிவேகம் காரணமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்த நிலையில் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் இருவர் மீதும் ஏறி இறங்கி அருகில் இருந்த சுவற்றில் மோதி நின்றது.விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.