ஈரோட்டில் பகுதி நேர வேலை எனக்கூறி, ஆன்லைன் மூலம் 12 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த அரசு ஊழியர் உட்பட 2 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரியும் சுதாகர், கட்டிடத் தொழிலாளி சண்முகம் ஆகியோர், டெலிகிராம் மூலம் விளம்பரம் கொடுத்து கதிரம்பட்டி தொழிலாளி நந்தகுமாரை ஏமாற்றினர்.