தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே விபத்து தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. நீல்புரத்தில் கார் மீது பைக் மோதிய விவகாரம் தொடர்பாக, நவீன் என்பவருக்கும் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தகுமார், நட்டார் ஆனந்த் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி வெட்டிக் கொண்டதில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.