திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதில், இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாத்தாம்பாடியை சேர்ந்த மினிவேன் ஓட்டுநர் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர் பூமி ஆகியோர், மதுபோதையில் சந்தித்து பேசிக் கொண்ட நிலையில், மீண்டும் மது வாங்க பணம் கேட்டது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி இரும்பு கம்பிகளால் தாக்கிக் கொண்டதில் இருவரும் காயமடைந்தனர். பலத்த காயத்துடன் காவல்நிலையம் சென்ற சந்திரபோஸை, போலீசார் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.