தேனி மாவட்டம் வருசநாடு அருகே பஞ்சதாங்கி மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களில் பலத்த காயத்துடன் இரு விவசாயிகள் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகைநகரை சேர்ந்த கருப்பையா என்பவர், அவருடைய இலவமர தோட்டத்திலும், தங்கம்மாள்புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், அவருக்கு சொந்தமான எலுமிச்சை மர தோட்டத்திலும் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் இருவரது சடலத்தையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் கரடி தாக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, இருவர் இறப்பில் மர்ம இருப்பதாக அவர்களது உறவினர்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.