திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரண்டு யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பூச்சி கொல்லி மருந்து கடைகளுக்கு வனத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. யானைகள் இறந்து கிடந்த பகுதிக்கு அருகே பூச்சி கொல்லி, யூரியா, குருணை மருந்து ஆகிய மருந்துகளின்காலி பைகள் கிடந்த நிலையில், இதனால் கூட யானைகள் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கூறி விவசாயிகளுக்கு மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என பூச்சிக்கொல்லி மருந்து கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.