திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பாலானந்தல் அருகே மங்கலம் பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் இரு மின் கம்பங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில், இரு மின் கம்பங்களும் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.