ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த, தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த ஆஷிக் அகமது, ராமநாதபுரம் அருகிலுள்ள அரியமான் கடற்கரைக்கு குடும்பத்துடன் காரில் சென்று விட்டு மீண்டும் மதுரை திரும்பிக் கொண்டிருந்தார். மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அடுத்த நென்மேனி என்ற இடத்தில் வந்த போது, எதிரே ராமநாதபுரம் நோக்கி வந்த மற்றொரு கார் மீது மோதியதில் தலைமை காவலர் ஆஷிக் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 கார்களிலும் பயணித்த 6 பேர் காயமடைந்தனர்.