திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பைக் மீது சிறிய சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது அனீஸ், ஷேக் முஹம்மது ஆகியோர் ஒட்டன்சத்திரம் நோக்கி வேடசந்தூர் சாலை விவேகானந்தா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சக்தி என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் இவர்களது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.