தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். தாப்பாத்தி நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், சாத்தூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்த தனுஷ், சூர்யா மற்றும் அருப்புக்கோட்டையை சேர்ந்த குமரேசன், பிரபு ஆகியோர் காயமடைந்தனர்.