மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கொத்தனார் கொலை வழங்கில் தலைமறைவாக இருந்த அவரது சித்தப்பா மற்றும் சித்தியை கைது செய்த போலீசார் அவரது இரு மகன்களை தேடி வருகின்றனர். மேலக்கால் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் சதீஷ், செக்கானூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் இரவு வீட்டுக்கு வந்தபோது அவரை வழிமறித்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார். தனிப்படை விசாரணையில் பிரிந்த சென்ற மனைவியை தன்னுடன் சேர்ந்து வைக்கமாறு சதீஷ் அவரது சித்தப்பா முருகனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.