நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே அரியவகை ஆமைகளை உயிருடன் எரித்துக் கொன்ற 2 பேரை கைது செய்த வனத்துறையினர், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அஜித், குமார் ஆகியோர் பரமத்தி வேலூரில் உள்ள தேங்காய் குடோனில் வேலை செய்து வருகின்றனர். இருவரும் அனிச்சம்பாளையம் காவிரி கரையோரத்தில் 9 ஆமைகளை பிடித்து எரித்ததை, ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இதைக்கண்ட வனத்துறையினர், அஜித், குமார் இருவரையும் கைது செய்து தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இப்பகுதியில் மருத்துவ குணங்களுக்காக ஆமை வேட்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.