ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகை வாங்குவதுபோல் நடித்து நகையை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். குருவரெட்டியூரில் உள்ள நகைக்கடையில் கடந்த மாதம் 16ஆம் தேதி நகை வாங்குவது போல் வந்த இரண்டு நபர்கள் வெள்ளி மோதிரத்தை வாங்கிக் கொண்டு, ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 16கிராம் தங்கநகையை திருடிச் சென்றனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் கர்நாடகாவை சேர்ந்த அப்சர்ஹுசைன் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஹரிப் ஹுசைன் என்பது தெரியவந்தது.