கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் கைதான தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் மயக்கமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சுகளை தடுத்து நிறுத்தி தவெக நிர்வாகிகள் விசாரித்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் இருந்த நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில், தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சேலத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி வெங்கடேஷ், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.